பொள்ளாச்சி அடுத்த மயிலாடுத்துறையில், விஜய் நடிக்கும் "வேட்டைக்காரன்' படப்பிடிப்பு நடந்து வருகிறது. பொள்ளாச்சி பகுதியில், சில நாட்களாக பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், வறட்சியாக காணப்பட்ட விவசாயி நிலங்கள் தற்போது "பச்சை பசேலென' புற்கள் வளர்ந்து செழுமையாக காட்சியளிக்கிறது. இதனால், சினிமா படப்பிடிப்பு குழுவினர் பொள்ளாச்சி நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
தற்போது விஜய் நடிக்கும் "வேட்டைக்காரன்' படப்பிடிப்பு நடந்து வருகிறது. இயக்குனர் தரணியின் உதவியாளராக இருந்த பாபுசிவன் இப்படத்தை இயக்குகிறார். பொள்ளாச்சி அடுத்த மயிலாடுதுறை அருகே விஜய், அனுஷ்கா சம்பந்தப்பட்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. சினிமா சூட்டிங்கை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் அந்த பகுதியில் திரண்டிருப்பதால் பரபரப்பு நிலவுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment