உரிச்சு உரிச்சு காமிக்கிறாங்களே தவிர, உருப்படியா நடிக்க விடுறதில்லையே? நமீதாவின் நெடுநாள் ஏக்கம் இது. இந்த ஏக்கத்தை போக்க வந்திருக்கிறது அழகான பொண்ணுதான் திரைப்படம். “படத்தை மொத்தம் 50 நாளில் எடுத்தோம். அதிலே 35 நாட்கள் நமீதா நடிச்சிருக்காங்க” என்றார் படத்தின் இயக்குனர் திரு. எந்த அழகான பொண்ணை பார்த்தாலும், நம்மையறியாமல் ஒரு ஏக்கம் வரும். லேசா காதலும் வரும். இந்த படத்திலேயும் நமீதாவை பார்த்தவுடன் ஹீரோவுக்கு காதல் வருது. ஆனால் ஒரு பிரச்சனை. என்னன்னா...?
அந்த பையனை விட நமீதாவுக்கு வயசு அதிகம். இப்படி முறைசாரா காதலை மையப்படுத்தி படங்கள் வந்திருக்கலாம். ஆனால், இந்த படத்தில் இன்னொரு விஷயம் என்னன்னா சுமாரான பையன் சூப்பர் பெண்ணை (பொம்பளையை?) காதலிக்கிறதுதான்.
தன்னை விட வயதில் குறைந்த ஒருவன் தன்னை ஒருதலையாக காதலிப்பதை அறிகிற அவள், அந்த காதலை ஏற்றுக் கொண்டாளா? அல்லது அட்வைஸ் பண்ணி திருத்தினாளா? என்பதுதான் க்ளைமாக்ஸ்!
வானத்தில் நிலவுக்கு கறை அழகு/ கன்னத்தில் விழுகின்ற குழி அழகு/ ஆள் தின்னும் வளைவுகள் உனதழகு/ நீ அழகான பொண்ணுதான் என்று ஒரு பாடலை எழுதி அதற்கு சுந்தர் சி பாபு இசையமைத்திருக்கிறார். “கேட்டுட்டு நமீதாவே சொக்கி போயிட்டாங்க தெரியுமா” என்றார் இப்படத்தின் டைரக்டர் திரு.
நல்லா நடிக்கிற நடிகைகள் எல்லாம் கவர்ச்சியில் இறங்கிட்டாங்க. கவர்ச்சி நடிகைகள் எல்லாம் நடிப்பிலே இறங்கிட்டாங்க. கோடம்பாக்கத்தில் எல்லாத்தையும் புரட்டி போடுற சுனாமி வந்திருச்சோ என்னவோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment