ஆதவன் படத்தின் பாடல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிக்காக ஐஸ்லேண்ட் சென்றுள்ளது ஆதவன் யூனிட். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், சூர்யா, நயன்தாராவுடன் 35 நடனக் கலைஞர்களும் டான்ஸ் மாஸ்டர் தினேஷும் ஐஸ்லேண்ட் சென்றுள்ளனர்.
கவிஞர் தாமரை எழுதிய ஏனோ ஏனோ பனித்துளி தேனோ பாலோ எரியுது தீ போல என்ற பாடலை அங்கு படமாக்குகிறார்கள்.
ஆதவன் படத்தின் கதையைவிட நயன்தாராவின் பச்சை பற்றிதான் இன்டஸ்டரியில் அதிக பேச்சு. நயன்தாரா பிரபுதேவாவின் பெயரை தனது கையில் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார். இந்த பச்சை படத்தில் தெரியுமா தெரியாதா என கோடம்பாக்கத்தில் பெட் கட்டி காத்திருக்கிறது ஒரு கூட்டம்.
இந்த பச்சை சமாச்சாரம் தெரியாதபடி படம் எடுங்கள் என ஒளிப்பதிவாளருக்கு நயன் அன்புக் கட்டளை போட்டிருப்பதாகவும் செய்தி உலவுகிறது. எதற்கும் படத்தின் ரிலீஸ் வரை காத்திருக்க வேண்டியதுதான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment